Connect with us

இலங்கை

இலவச யோகாக் கற்கை நல்லூரில் ஆரம்பம்!

Published

on

Loading

இலவச யோகாக் கற்கை நல்லூரில் ஆரம்பம்!

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வரும் யோகாக்கலை அடிப்படைக் கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க்கந்தன் ஆலயப் பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் எதிர்வரும் செப்ரெம்பர் 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை நடைபெறும் இந்த வகுப்புகளில் ஆர்வமுள்ள இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ளமுடியும். மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த கற்கைநெறியைப் பூரணமாக முடிப்பவர்களுக்குக் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவிருக்கின்றன. பயில விரும்புவோர் அன்றைய தினம் நேரடியாக வருகை தந்து பதிவுகளை மேற்கொண்டு வகுப்பில் இணைந்துகொள்ளலாம். மேலதிக தகவல்களை 0212222203 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமெனவும் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன