சினிமா
பிறந்தநாளில் தனது காதலியை கைப்பிடித்த விஷால், நிச்சயதார்த்த போட்டோஸ்
பிறந்தநாளில் தனது காதலியை கைப்பிடித்த விஷால், நிச்சயதார்த்த போட்டோஸ்
நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக இவர் நடித்த மதகஜராஜா படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது.பிஸியாக படங்கள் நடித்து கொண்டிருந்த விஷால் சில தினங்களுக்கு முன் நடிகை தன்சிகாவை காதலித்து வருவதாக தெரிவித்தார். மேலும் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி தன் திருமணம் குறித்து ஒரு அப்டேட் உள்ளதாக அறிவித்தார்.இந்நிலையில், இன்று இவர்கள் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இது தொடர்பான போட்டோஸ் தற்போது விஷால் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
