Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் ஏ-9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி

Published

on

Loading

கிளிநொச்சியில் ஏ-9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி

கிளிநொச்சி ஏ-9 வீதி கரடிபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்து பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக உள்ள தரிப்பிடத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த ரிப்பர் வாகனம் வேககட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதேவேளை டிப்பருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடதிலேயே பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடம் கசிப்பு காணப்பட்டதாக தெரிவித்த பொலிஸார். காயமடைந்து காணப்பட்டவரை அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு கூடியிருந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததோடு, புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். பின்னரே நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன