பொழுதுபோக்கு
சென்னை காவல் ஆணையரகம் வந்த ஜாய் கிறிசால்டா: மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்
சென்னை காவல் ஆணையரகம் வந்த ஜாய் கிறிசால்டா: மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தனது தாயுடன் வந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பான புகாரை அளித்துள்ளார். திருமணம் செய்வதாகக் கூறி தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.மாதம்பட்டி ரங்கராஜ்க்கு முதல் திருமணம் வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருடன் நடந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இடையேயான விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது, மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சில விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.சமீபத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இருவரும் மாலையுடன் கோயிலில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படங்கள், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக பலரால் யூகிக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே, ஜாய் கிரிஸில்டா காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரின்படி, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், அதன் விளைவாக தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் திரையுலகம் மற்றும் சமையல் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், சமூக வலைத்தளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.
