சினிமா
2வது மனைவியை ஏமாற்றினாரா குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ்
2வது மனைவியை ஏமாற்றினாரா குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ்
வெள்ளித்திரையில் படங்கள் நடித்தாலும் சமையல் தொழில் மூலம் மிகவும் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். எந்த ஒரு பிரபலத்தின் வீட்டி நிகழ்ச்சியோ, அரசியல் பிரபலங்களின் நிகழ்ச்சியோ எது பார்த்தாலும் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் அதிகமாக இருக்கும். குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சொந்த தொழில் என பிஸியாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை மறுமணம் செய்திருக்கிறார்.அவர் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது தான் இவர்களின் திருமண செய்தியே வெளியானது.இந்த நிலையில் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை மறுமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
