இலங்கை
யாழில் 400 வருடங்கள் பழமையான ஆலய மஹாகும்பாபிஷேகம்
யாழில் 400 வருடங்கள் பழமையான ஆலய மஹாகும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணவி கிராமத்தில் 400 வருடங்களுக்கு மேல் பழைமையான பிரகேஷ்வரன் ஆதி சிவன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
பழைமை மாறாத வகையில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று (29) வெள்ளிக்கிழமை காலை 9.20 மணி தொடக்கம் சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதர், சங்கானை பிரதேச செயலர் ஆகியோரும் குறித்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டனர்.
400 வருடங்கள் பழமையான ஆலயத்தின் மஹாகும்பாபிஸேகத்தைக் காண அப்பகுதி அடியார்கள் திரண்டு சென்று ஆதிசிவனின் திருவருளைப் பெற்றுச் சென்றனர்.
