Connect with us

சினிமா

ரெட் ஜெயன்ட்-இன் புதிய தலைவர் இன்பநிதி…! வெளியான தகவல் இதோ…!

Published

on

Loading

ரெட் ஜெயன்ட்-இன் புதிய தலைவர் இன்பநிதி…! வெளியான தகவல் இதோ…!

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் முழுமையாக செயல்படத் தொடங்கியதுடன், அவரது மகன் இன்பநிதி பட்ஜெட் மற்றும் தயாரிப்பு துறையில் தந்தையின் பாதையில் செல்வதற்கான முதல் படியைக் வைத்துள்ளார். இந்த ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் கலைஞர் டிவியின் இயக்குநராக பொறுப்பேற்ற இன்பநிதி, தற்போது ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனத்தின் புதிய CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.வெளிநாட்டு படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாட்டுக்கு திரும்பிய இன்பநிதி, ரெட் ஜெயன்ட் மூவீசின் புதிய தலைமையிலான முதல் தயாரிப்பாக, ஒரு சர்வதேச தரத்தில் அமையும் படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதிலும் மிக முக்கியமாக, தமிழ் சினிமாவின் இரு மிகப்பெரும் நாயகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவிருக்கும் இந்த பிரமாண்ட படத்துக்கான தயாரிப்பு இன்பநிதியின் தயாரிப்பு அறிமுகமாக இருக்கிறது என்பது சிறப்பு அம்சமாகும்.இதை இயக்கும் பெருமையை லோகேஷ் கனகராஜ் சுமக்க உள்ளார். தமிழ் சினிமாவின் வரலாற்றில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – கமல் மீண்டும் ஒரே படத்தில் நடிக்கின்றனர் என்பதும், கலைஞர் குடும்பத்தின் நான்காம் தலைமுறை சார்பாக இன்பநிதி இப்படத்தை வழங்குகிறார் என்பதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன