தொழில்நுட்பம்
2025-ன் கடைசி சூரிய கிரகணம்: அடுத்த மாதம் நிகழும் அற்புத வானியல் நிகழ்வு! தேதி, நேரம் என்ன?
2025-ன் கடைசி சூரிய கிரகணம்: அடுத்த மாதம் நிகழும் அற்புத வானியல் நிகழ்வு! தேதி, நேரம் என்ன?
வானியல் ஆர்வலர்களுக்கு 2025-ம் ஆண்டு முக்கியமான ஆண்டாக அமையும். இந்த ஆண்டில் பல வானியல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. மார்ச் முதல் சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஆண்டின் 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் விரைவில் நிகழ உள்ளது. இந்த நிகழ்வு உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தெரியாவிட்டாலும், விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் இது குறித்த ஆர்வம் அதிகமாகவே உள்ளது.சூரிய கிரகணம் 2025: தேதி மற்றும் நேரம்தேதி: 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 அன்று நிகழவுள்ளது.நேரம்: இந்திய நேரப்படி (IST) இரவு 10:59 மணிக்குத் தொடங்கி, மறுநாள் அதிகாலை 3:24 மணி வரை நீடிக்கும்.ஸ்பேஸ்.காம் (Space.com) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தச் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி செப். 21 இரவு 11:00 மணிக்குத் தொடங்கி, செப்.22 அதிகாலை 3:24 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணத்தின் அதிகபட்சமாக 80% பகுதி தெற்கு பசிபிக் பெருங்கடலில், நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு இடையே தெரியும். அண்டார்டிக் தீபகற்பத்தில், சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு சுமார் 12% பகுதியளவு கிரகணம் மட்டுமே தெரியும்.இந்த சூரிய கிரகணம் உலகின் பல்வேறு பிராந்தியங்களில் தெரியும்.எனினும் அப்போது இந்தியாவில் இரவு நேரம் என்பதால், இந்திய மக்களால் இதைப் பார்க்க முடியாது. அதேபோல, நேர வேறுபாடு காரணமாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் உள்ள மக்களும் இந்தச் சூரிய கிரகணத்தைக் காண முடியாது.2025 ஆண்டின் 2வது சந்திர கிரகணம் எப்போது?இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் அடுத்த மாதம் 7 ஆம் தேதி நிகழவுள்ளது. முன்னதாக மார்ச் 2025-ல், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
