பொழுதுபோக்கு
மத்தவங்க பணத்தில் உதவி பண்ண நான் எதுக்கு? என்னை நெகிழ வைத்த நார்வே குழந்தை; கே.பி.ஒய் பாலா உருக்கம்!
மத்தவங்க பணத்தில் உதவி பண்ண நான் எதுக்கு? என்னை நெகிழ வைத்த நார்வே குழந்தை; கே.பி.ஒய் பாலா உருக்கம்!
விஜய் டிவியில் போட்டியாளராக கலந்து கொண்ட கேபிஒய் பாலா பிறகு அதே சேனலில் தொகுப்பாளராக மாறி இருந்தார். அதிலும் சில வருடங்களுக்கு முன்பு பாலா இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளில் பாலா கலந்து கொண்டார். அதன் மூலமாக வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு தான் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து பலருக்கு உதவி செய்து வருகிறார்.அதிலும் வாகன வசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாத கிராமங்களுக்கு ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார். அதற்காக மெயின்டனன்ஸ் செலவுகளையும் தொடர்ந்து பாலாவை கவனித்து வருகிறார். அதோடு நடிகர் மற்றும் சமூக சேவகராக இருக்கும் லாரன்ஸ் மாஸ்டருடன் சேவை என்ற அமைப்பிலும் பாலா இணைந்திருக்கும் நிலையில் அதன் மூலமாகவும் பலருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு அதற்கான உதவிகளும், விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான பொருள்கள் பலவற்றையும் வாங்கிக் கொடுத்து வருகிறார்கள். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. பாலாவின் சேவையை பலர் பாராட்டினாலும் சிலர் பாலா இவ்வளவு செய்வது சரிதான் ஆனால் எதற்காக அதை விளம்பரப்படுத்த வேண்டும்? அவர் உண்மையாக யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் அதை அடுத்தவர்களுக்கு சொல்லாமல் கொடுக்க வேண்டியதுதானே? என்று பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள். தான் செய்யும் உதவியை எதற்காக இவர் பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் பாலாவிற்கு தொடர்ந்து உதவி செய்வதற்கு பணம் எங்கிருந்து வருகிறது? பணத்தை எல்லாம் இப்படி உதவி செய்துவிட்டால் நாளைக்கு நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்.இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் பாலா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் “நான் உதவி செய்வதை வீடியோவாக வெளியிடுவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நான் எதற்காக அப்படி செய்கிறேன் என்றால் நான் ஒரு உதவி செய்வது, ஒரு கல் எடுத்து வைக்கிறேன் என்றால் அதை பலர் பின் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் தான். நான் செய்யும் சின்ன சின்ன உதவிகளை பார்த்து பலர் மனம் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.அதே போல நான் உதவியாக கொடுக்கும் பணம் என்பது நான் சம்பாதித்த படம் மட்டுமே. எனக்கு அதை யாரும் கொடுப்பதில்லை. நான் நினைத்தால் ரூ. 2000 மற்றும் கொடுத்துவிட்டு 20,000 கொடுத்ததாக கூறிவிடலாம். ஆனால் நான் அதை செய்யவில்லை. நான் சம்பாதித்ததை தாண்டி வேறு எந்த பணத்தையும், யாருடைய பணத்தையும் வைத்து நான் உதவி செய்யவில்லை. நார்வேயில் இருந்து ஒரு குழந்தை பாக்கெட் முனியை சேர்த்து வைத்து இந்தியாவிற்கு கொன்று சென்று இதை வைத்து உதவுங்கள் என்றது. அது போல நிறைய பேருக்கு இது ஒரு மாற்றத்தி உருவாக்கும். ” என்று கூறினார்.
