Connect with us

பொழுதுபோக்கு

கேரக்டரை மாத்திட்டாங்க, என்னை பார்த்து எனக்கே வெட்கமா இருந்துச்சு: சினிமாவை விட்டு விலகிய கமல் பட நடிகை உருக்கம்!

Published

on

Kamalini Kugarjee

Loading

கேரக்டரை மாத்திட்டாங்க, என்னை பார்த்து எனக்கே வெட்கமா இருந்துச்சு: சினிமாவை விட்டு விலகிய கமல் பட நடிகை உருக்கம்!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் சிறிது நேரமே வந்திருந்தாலும் தனது நடிப்பால் பலரின் இதயங்களை வென்ற நடிகை கமலினி முகர்ஜி, ஒரு சில படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது ஏன் படங்களில் நடிப்பதில்லை என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.2000-களின் நடுப்பகுதியில் தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் மத்தியில் தனித்துவமான நடிகையாக வலம் வந்தவர் தான் கமலினி முகர்ஜி. சேகர் கம்முலா இயக்கிய ‘ஆனந்த்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து ‘ஸ்டைல்’, ‘கோதாவரி’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். குறிப்பாக ‘ஹேப்பி டேஸ்’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்த ஆங்கிலப் பேராசிரியர் கேரக்டர், இளைய தலைமுறையினரின் மத்தியில் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.தனது இயல்பான நடிப்பால், எளிமையின் அழகுக்கு அடையாளமாக அவர் கருதப்பட்ட இவர், 2006-ம் ஆண்டு கௌதம்மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் அவரின் மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு காதல்னா சும்மா இல்ல, இறைவி ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்த கமலினி முகர்ஜி, கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான புலிமுருகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பல வருடங்களாகத் தெலுங்கு திரையுலகில் இருந்து விலகி இருந்த கமலினி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’ என்ற படம் தான் நான் தெலுங்கு சினிமாவில் இருந்து விலக முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், அந்தப் படக்குழுவினருடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. என் சக நடிகர்கள் அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தனர். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு என்னிடம் சொல்லப்பட்ட எனது கேரக்டர், படம் வெளியாகும் போது முற்றிலும் வேறுமாதிரி இருந்தது. இது என்னை மிகவும் காயப்படுத்தியது. படம் முடிந்ததும், நான் நடித்ததை பார்த்த பிறகு வெட்கமாக இருந்தது. அதற்காக நான் சண்டையிடவோ, வம்பு செய்யவோ விரும்பவில்லை. அதனால்தான் தெலுங்கில் நடிக்க கூடாது என்று முடிவு செய்து, மற்ற மொழிகளில் நடித்தேன்.தற்போது, தனது நடிப்புத் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தயாராகி வருகிறார். மேலும் தான் இளமையாக இருந்தபோது படிப்பில் கவனம் செலுத்தினேன். வளர்ந்ததும், படங்களில் நடித்தேன். இப்போது ஒரு மனைவியாக குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கமலனி முகர்ஜி கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன