இலங்கை
பேருவளை உணவகத்தில் உணவு உட்கொண்ட பலருக்கு ஒவ்வாமை
பேருவளை உணவகத்தில் உணவு உட்கொண்ட பலருக்கு ஒவ்வாமை
பேருவளை சீனன்கோட்டை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் உணவு கொண்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் காய்ச்சல், தலைவலி, வாந்திபேதி ஏற்பட்டதை தொடர்ந்து பலர் பிரதேசத்தில் உள்ள வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிலர் பேருவளை ஆதார வைத்தியசாலை, களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை உணவு ஒவ்வாமையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாயொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர், பேருவளை பிரதேச சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
