இலங்கை
தமிழர் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; துயரில் கதறும் குடும்பம்
தமிழர் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; துயரில் கதறும் குடும்பம்
திருகோணமலை மாவட்டம் , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
தங்க நகர் பகுதியைச் சேர்ந்தவரே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இரவு வயலுக்கு யானை காவலுக்குச் சென்று காலை வீடு திரும்புகையில் தோட்டம் ஒன்றுக்குள் மறைந்திருந்த யானை தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்து வருவதாகவும் காட்டு யானைகள் ஊருக்குள் உள்நுழைவதை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
