Connect with us

சினிமா

எல்லாத்தையும் கொடுக்காதே… உனக்காக கொஞ்சம் வச்சுக்கோ! பாலாவிற்கு அட்வைஸ் பண்ண நடிகர்…

Published

on

Loading

எல்லாத்தையும் கொடுக்காதே… உனக்காக கொஞ்சம் வச்சுக்கோ! பாலாவிற்கு அட்வைஸ் பண்ண நடிகர்…

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறப்பு பெற்றுள்ள நடிகர் விஜய் சேதுபதி, எளிமையும், உணர்வும் கலந்த பேச்சுத் திறமையால் பலரின் மனங்களைக் கவர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், KPY பாலா குறித்த முக்கியமான ஒரு உண்மை அனுபவம் கலந்த கருத்தை பகிர்ந்துள்ளார்.இது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி பேட்டியின் போது, “நான் பாலா கிட்ட சொல்லிட்டே இருப்பன்… நிறைய பேருக்கு தான தர்மம் பண்றவன் கைல எப்பவும் காசு இருக்கணும்.எல்லாத்தையும் கொடுத்தாலும், உனக்குனு கொஞ்சம் வச்சுக்கடான்னு சொல்லுவேன். நிறைய பேருக்கு உதவி பண்ணுறவங்க கீழே விழுந்தா, பிறகு உதவி பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு பயம் வந்துடும். அந்த பயத்தை ஏற்படுத்தாம பார்த்துக்கோ!”என்று பாலாவிற்கு கூறுவதாக தெரிவித்தார். பாலா, தமிழ் சினிமாவில் காமெடி மூலம் அதிகளவான மக்களின் கவனத்தை ஈர்த்தவர். இவ்வாறு உயர்ந்த கலைத்திறன் கொண்ட பாலா, தனிப்பட்ட வாழ்க்கையில் தான தர்மத்தில் ஈடுபடுவதை தன்னலமில்லாமல் செய்து வருகின்றார். அதனால் தான், விஜய் சேதுபதியின் இந்த கருத்து தற்பொழுது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன