Connect with us

இலங்கை

வசதி படைத்தவனுக்கு ஒரு நீதி சாதாரண குடிமக்களுக்கு ஒரு நீதி – மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்!

Published

on

Loading

வசதி படைத்தவனுக்கு ஒரு நீதி சாதாரண குடிமக்களுக்கு ஒரு நீதி – மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்!

இந்த நாட்டில் வசதி படைத்தவனுக்கும் ஆட்சி அதிகாரம் உள்ளவனுக்கும் ஒரு நீதியும் சாதாரண குடிமக்களுக்கு ஒரு நீதியுமே உள்ளது என சம உரிமை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(30) இடம்பெற்ற ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அவர் மேலும் கூறுகையில்,

“முன்னாள் ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்கவை கைது செய்ததும் எல்லா கட்சிகளம் ஒன்று சோர்ந்து ஜனநாயக போரட்டம் நடத்துகின்றனர்.

இந்த நாட்டில் பட்டலந்தை பிரச்சனை தொடக்கம் சிறுபான்மையினரது பிரச்சனை வரை முன்னின்று உருவாக்கியவரே ரணில்.

Advertisement

குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவருக்கு பிணை வழங்கப்பட்டு விட்டது.

இவ்வாறு 30 வருடங்களாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம். ஆகவே வசதி படைத்தவனுக்கும் ஆட்சி அதிகாரம் உள்ளவனுக்கும் ஒரு நீதியும் சாதாரண குடிமக்களுக்கு ஒரு நீதியும் உள்ள ஒரு நாடாக இந்த நாடு தற்போதும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன