இலங்கை
வீட்டிலிருந்து உணவு கேட்கும் சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர்
வீட்டிலிருந்து உணவு கேட்கும் சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமது வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் நேற்று(30) மாலை அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
அனுமதி கோரிக்கையை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
