Connect with us

பொழுதுபோக்கு

15 வயதில் நான் கேட்ட பாடல்; இதில் என்னை மயக்கிய வரிகள் இருக்கு: எம்.எஸ்.வி பாடலை புகழ்ந்த இளையராஜா!

Published

on

Ilayaraja MSV

Loading

15 வயதில் நான் கேட்ட பாடல்; இதில் என்னை மயக்கிய வரிகள் இருக்கு: எம்.எஸ்.வி பாடலை புகழ்ந்த இளையராஜா!

தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா, தனது இசையால் மட்டும் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், அவரே வியந்து பாராட்டிய எம்.எஸ்.வி.- கண்ணதாசன் இணைந்த ஒரு பாடல் இருக்கிறது. இது பற்றி அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்,மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – டிகே ராமமூர்த்தி பி.பி.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில், முதலில் எம்.எம்.விஸ்வநாதன் ஒரு பாடலை பாடியிருப்பார். அந்த பாடலை பாடி முடித்தவுடன், இந்த பாட்டு தம்பிக்கு ரொம்ப இஷ்டமான பாட்டு. அதனால இதை பாடினேன் என்று சொல்ல, இளையராஜா எம்.எஸ்.வி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்கிறார். அவரை எம்.எஸ்.வி கட்டி தழுவிக்கொள்கிறார்.இதனைத் தொடர்ந்து, மேடை எப்படி அலங்கரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது பாருங்கள். மெல்லிசை மன்னர்கள், இசை ஞானி, கவிஞர் காமகோடியான் அழைத்து வருகிறார். பிபி ஸ்ரீனிவாஸ் அவர்கள் பார்வையை பதிவிட்டு கொண்டிருக்கிறார். மேடையின் அலங்காரம் உயரிக்கொண்டே செல்கிறது என்று தொகுப்பாளர் சொல்ல, அடுத்து பேசும், டி.கே.ராமமூர்த்தி இந்த பாட்டுக்கு 58 வயது ஆச்சு என்று சொல்கிறார். அதன்பிறகு பேசும் இளையராஜா, எனக்கு ஆனும் வயசு மாதிரி என்று சொல்கிறார்.அதன்பிறகு எம்.எஸ்.வியை பார்த்து உங்களுக்கு 22. எனக்கு 58. இந்த பாடலை நான் கேட்ட வருஷம் வயசு ஞாபகம் இருக்கிறது, 15லிருந்து 17க்கு உள்ள இருக்கும். பாக்கியலக்ஷ்மி என்ற திரைப்படத்திலிருந்து இந்த பாடல். பண்ணப்புரத்திலிருந்து கோம்பைக்கு நடந்து போகக்கூடிய வழிகளிலே இந்த பாடல் வானொலியில் வரும்.இதில் முக்கியமான விஷயம் என்னனா ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு சிச்சுவேஷன் சொல்லிட்டு, அதுக்கு அவர்து ட்யூன் போட்டு, அதுக்கு ஒரு பாடல் எழுதி, சமுதாயத்திலே இருக்கக்கூடிய எல்லாருக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயத்தை எழுது கூடிய சிவசக்தி படைத்த கண்ணதாசன். அதில விஷயம் என்னனா கவிஞர் முதலில் எழுதியாரோ அண்ணன் ட்யூன் போட்டார்களா தெரியாது. வார்த்தை எழுதினதுக்கு அதுதான் சொல்ல வருகிறேன்.அந்த மாலை பொழுதின் மயக்கத்தை, அந்த மயக்கத்தை அந்த சுரத்தைக் கொண்டு வந்து மாற்றினார் பார்த்தீங்களா. மாலை பொழுதின் மயக்கத்திலே நான், கனவு கண்டேன் தோழி. அதுக்கப்புறம் என்னை பாதித்த வார்த்தைகளே அவர் போட்டுகிறார். இளமையெல்லாம் வெறும் கனவுமயம் இதில், மறைந்தது சில காலம். எளிவு அறியாது முடிவும் புரியாது. மயங்குது எதிர்காலம். மாலை பொழுதில் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி.இன்று உங்களுக்கு அத்தனை பேருக்கும் சேரக்கூடிய அந்த வார்த்தைகள் அமைந்திருக்கிறேன் என்றால் அதுதான் பாடல். அதுதான் இசை என்று இளையராஜா புகழ்ந்து பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன