இலங்கை
இவ்வாண்டில் 300 பொலிஸார் பணியிடை நீக்கம்!
இவ்வாண்டில் 300 பொலிஸார் பணியிடை நீக்கம்!
சட்டவிரோதச் செயற்பாடுகளின் காரணமாக 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
எதிர்க்கட்சிகள் அரசசேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவேண்டாம். அரச சேவைக்கு பொருத்தமற்ற சிலர் இருக்கலாம். பொலிஸில் கூட அவ்வாறானவர்கள் இருக்கக் கூடும். அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த சட்டவிரோதச் செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்கமுடியாது. தவறிழைப்பவர்களை எக்காரணத்துக்காகவும் அரச சேவையில் வைத்திருக்கப்போவதில்லை. அதே போன்று ஏனைய துறைகளிலும் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது- என்றார்.
