பொழுதுபோக்கு
பொது நிகழ்ச்சியில் இடுப்பை கிள்ளிய நடிகர்; கடுப்பாகி வெளியேறிய நடிகை; தீயாக பரவும் வீடியோ!
பொது நிகழ்ச்சியில் இடுப்பை கிள்ளிய நடிகர்; கடுப்பாகி வெளியேறிய நடிகை; தீயாக பரவும் வீடியோ!
பிரபல போஜ்புரி நடிகரும் பாடகருமான பவன்சிங் சமீபத்தில் நடிகை அஞ்சலி ராகவுடன் லக்னோவில் நடைபெற்ற ஒரு பொதுவெளி விழாவில் பங்கேற்றார். இவ்விழா, “சாயா சேவா கரே” எனும் பாடலுக்கான விளம்பர நிகழ்வாக இருந்தது. இந்நிகழ்வின் போது, இருவரும் மேடையில் ரசிகர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தனர்.இந்தச் சந்தர்ப்பத்தில், அஞ்சலி ராகவ் பேசிக் கொண்டிருந்தபோது, பவன்சிங் திடீரென அவரது இடுப்பை தொடும் வகையில் நடந்து கொண்டார். அஞ்சி, இது ஒரு எதிர்பாராத நிகழ்வாக இருந்ததால், சற்று குழப்பத்துடன், ஆனால் வெளிப்படையாகக் காண்பிக்காமல், சிரித்தபடி பவன்சிங்கை திரும்பி பார்த்தார். இருப்பினும், பவன்சிங் மீண்டும் ஒருமுறை அதேபோன்ற செயலில் ஈடுபட்டார்.இந்தச் செயல், அஞ்சலிக்கு உள்ளுக்குள்ளாக ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது என்று பார்வையாளர்கள் உணர்ந்தனர். ஆனால், நிகழ்வின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அஞ்சலி வெளியில் சிரித்த முகத்தோடு நடித்து நிகழ்வை தொடர்ந்தார்.இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் கிறுக்கமான விவாதங்களை எழுப்பியுள்ளது. சிலர் இதனை பவன்சிங்கின் தவறான நடத்தை என விமர்சிக்க, மற்றவர்கள் அது ஒரு நண்பர்களுக்கிடையிலான சாதாரண நிகழ்வு என்றும் கூறுகின்றனர். இது போன்ற நிகழ்வுகள், நடிகைகள் பொது நிகழ்வுகளில் எதிர்கொள்ளும் நுணுக்கமான சூழ்நிலைகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.பொது மேடையில் பவன்சிங் நடிகையின் இடுப்பை கிள்ளிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அஞ்சலி இந்த சம்பவத்திற்கு பிறகு வித்தியாசமான முடிவை எடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், “சிலர் என்னைக் குறை கூறுகிறார்கள். அதை ரசிக்கிறேன் என்கின்றனர். அனுமதியின்றி என்னை யாராவது தொட்டால் நான் மகிழ்ச்சியடைவேனா? அதை எப்படி ரசிப்பேன் என்று நினைக்கிறீர்கள்?.பவன் சிங் என் இடுப்புக்கு அருகில் ஏதோ இருக்கிறது என்றார். அது எனது சேலை அல்லது ரவிக்கையின் டேக்காக இருக்கலாம் என்று நினைத்தேன். இருப்பினும், நிகழ்வுக்குப் பிறகு, அங்கு எதுவும் இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் எனக்கு கோபம் வந்தது. எந்தப் பெண்ணையும் அனுமதியின்றி தொடக்கூடாது. நாங்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இனி போஜ்புரி திரையுலகில் பணியாற்ற மாட்டேன்” என்று கூறியுள்ளார். A post shared by Anjali Raghav (@anjaliraghavonline)அந்த விவகாரத்தில் போஜ்புரி நடிகர் பவன் சிங் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, தனது செயல் அஞ்சலியை பாதித்திருந்தால் மன்னித்துவிடுமாறு நடிகர் பவன் சிங் தெரிவித்துள்ளார்.
