Connect with us

இலங்கை

மயிலிட்டித்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

Published

on

Loading

மயிலிட்டித்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று திங்கட் கிழமை காலை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். 

Advertisement

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகின. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் மாண்புமிகு ஜனாதிபதி ஆகியோரின் உரைகள் நடைபெற்றன. 

இந்த நிகழ்வுகளில் பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன