இந்தியா
சீரற்ற வானிலை; 320 பேர் உயிரிழப்பு
சீரற்ற வானிலை; 320 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் தொடரும் பருவமழை காரணமாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகவெடிப்பு மற்றும் பலத்த மழை காரணமாக இமாச்சல பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சீரற்ற வானிலையால் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள், 1,236 மின் மாற்றிகள், 424 நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் 819 வீதிகள் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாவது.
கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல், மாநிலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில் மண்சரிவு, திடீர் வெள்ளம், மின்சாரம் போன்றவை தொடர்பான சம்பவங்களால் மாத்திரம் 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வீதி விபத்துகளினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தியசெய்திகள் தெரிவிக்கின்றன.
