இலங்கை
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி!
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி!
காலி – கொழும்பு பிரதான வீதியில் பன்னம்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அங்குருவாதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
