Connect with us

இலங்கை

அனுரா அரசிலும் அராஜகமா? நீதி கிடைக்குமா? பரிதாப மரணம்

Published

on

Loading

அனுரா அரசிலும் அராஜகமா? நீதி கிடைக்குமா? பரிதாப மரணம்

கடந்த27ஆம் திகதி இரவு அனுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கப்ரகவாகனத்தை அந்த பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.

 இதன்போது குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரால் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

Advertisement

 காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். 

அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் காலை சாவடைந்தார்.

வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் வயது 41என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சாவடைந்துள்ளதுடன்,பண்டிவிரிச்சான் பகுதியைசேர்ந்த நிக்சன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன