Connect with us

பொழுதுபோக்கு

‘கூலி’ படத்தில் ரஜினி குரல் ஏ.ஐ தான்’… கோவையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய லோகேஷ் கனகராஜ் பேச்சு

Published

on

loki rajini

Loading

‘கூலி’ படத்தில் ரஜினி குரல் ஏ.ஐ தான்’… கோவையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய லோகேஷ் கனகராஜ் பேச்சு

கோயம்புத்தூரில் உள்ள வெள்ளலூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் (SSVM) பள்ளியில், The Future is Here என்ற தலைப்பில் ரோபோடிக்ஸ் மற்றும் ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.நிகழ்வின்போது, எதிர்காலத் திரைக்கலைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்ற மாணவர்களின் கேள்விக்கு, “ஒருபோதும் யாருடைய ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அடுத்தது, இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார். மேலும், வாழ்க்கை சினிமாவைப் பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தவறு என்றும், ஒரு சினிமா நம்மை பெரிய அளவில் பாதிக்கிறதென்றால், நாம் வளர்ந்த விதம் தவறாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு திரைப்படம் பொழுதுபோக்குக்கு மட்டுமே என்றும், அது நம்மை சிந்திக்கத் தூண்டலாம், ஆனால் அது மட்டுமே போதுமானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், இந்த இளம் வயதிலேயே மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து, காப்புரிமை வாங்கியிருப்பது பெரிய விஷயம் என்று பாராட்டினார். திரைத்துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த கேள்விக்கு, “ஏஐ, திரைத்துறை முழுமையாக ஆதிக்கம் செலுத்தாது, ஆனால் அதன் உதவி நிச்சயமாக இருக்கும். ஏஐ தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்வது அவசியம்” என்றார்.மேலும், புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது காலப்போக்கில் நாம் அதற்கேற்ப பழகிக்கொள்வோம் என்றும், தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நம் கைகளில்தான் உள்ளது என்றும் கூறினார். வெற்றிமாறனின் கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு, “வெற்றிமாறன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அவர் பல படங்களை இயக்கியுள்ளார், நான் இப்போதுதான் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.“உங்களது படங்களில் ஏஐ எந்தளவிற்கு பயன்படுத்தப்படுகிறது?” என்ற கேள்விக்கு, “கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குரலுக்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று லோகேஷ் கனகராஜ் பதிலளித்தார். அனிருத் இசை அமைக்கும் போது ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், தானும் அனிருத்தும் இணைந்து நடிக்கும் திட்டம் குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தான் கூற வேண்டும் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.செய்தி: பி.ரஹ்மான், கோவை 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன