Connect with us

இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் இளங்குமரனின் கவனத்திற்கு

Published

on

Loading

பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் இளங்குமரனின் கவனத்திற்கு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கான விசேட பெண் நோயியல் மருத்துவமனை கடந்த 2024 மே மாதம் அப்போதைய ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டு ஒரு வருடத்தினை கடந்தும் இன்னும் செயற்படாது காணப்படுகிறது.
இங்குள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாடின்றி காணப்படுகிறது. 

 தொடர்ந்து பயன்பாடின்றி காணப்படுமாயின் அது பழுதடையும் வாய்ப்பு அதிகம்.
அதுமாத்திரமன்றி பயன்பாடின்றி காணப்படுவதனை காரணம் காட்டி வேறு வைத்தியசாலைகளை அந்த உபகரணங்களை கோரி பெற்றுக்கொள்ள முடியும்.

Advertisement

 அப்படியான பல சம்பவங்கள் நடந்துள்ளன.
எனவே எனக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இங்குள்ள உபகரணங்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்படும் முயற்சிகள் இடம்பெறுகிறது என செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தேன்.

 என்னுடைய செய்திகள் எப்பொழுதும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டவை.
எனவே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் இயங்காதுள்ள மருத்துவமனையை இயங்க வைக்க வலியுறுத்தியும், இங்குள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வெளியில் மாற்றப்படும் முயற்சியை தடுக்க கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.

 வெள்ளிக் கிழமைக்கு முன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது மருத்துவ உபகரணங்கள் வெளியில் கொண்டு செல்லப்படுவதற்கான எந்த முயற்சிகளும் இடம்பெறவில்லை என்று தெரிவித்த அவர் அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான வதந்திகள் பரப்பபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

Advertisement

images/content-image/1756771978.jpg

 கிளிநொச்சி தமிழரசு கட்சியை சேர்ந்த கரைச்சி தவிசாளர் உட்பட பலரும் இதனையே எழுதி வந்தனர்.
இதற்கு அப்பால் ஒரு படி மேல் சென்ற அரச எம்பியான இளங்குமரன் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு சென்று இங்குள்ள மருத்துவ உபகரணங்கள் மாற்றப்படுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை நோயாளர் நலன்புரிச் சங்கம் மக்களிடம் பொய்யான தகவல்களை வழங்கி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள செய்துள்ளனர்.

 எனவே அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என முறைப்பாடு செய்திருந்தார்.
முன்னைய அரசுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட இந்த அரசாங்கம் நியாயமான காரணத்தை முன் வைத்து மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு எதிராக பொலீஸ் நிலையம் செல்வது என்பது இவர்களது ஜனநாயக பண்பை கேள்விக்குள்ளாகியுள்ளது.

 ஒரு வருடத்திற்க மேல் இயங்காது உள்ள வடக்கு மாகாண விசேட பெண் நோயியல் மருத்துவமனை இயங்க வைப்பதற்கு நான்காவது தடவையாக இந்த மாவட்ட மக்களால் எம்பியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள சிறிதரன் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை, அதிகாரத்தில் உள்ள அரச தரப்பு எம்பியான இளங்குமரனும் நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertisement

 இக் கடிதம் ஒரு வைத்தியசாலையிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.
இதில் இங்குள்ள இரண்டு மயக்க மருந்து உபகரணங்களை தங்களுக்கு வழங்குமாறு கோரியுள்ளனர்.
இதனையும் எதிர்த்தே நோயாளர் நலன்புரிச்சங்கம் போராடியது. 

 ஒவ்வொன்றாக மருத்துவ உபகரணங்கள் வெளியில் சென்றால் இந்த விசேட பெண் நோயியல் மருத்துவமனையின் செயற்பாடு இல்லாமலே போய்விடும் என்பதனை கருத்தில் கொண்டே அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

 ஆனால் இது பொய் என்று சொல்லியே இளங்குமரன் எம்பி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார். இது பொய் அவ்வாறு எந்த முயற்சியும் நடக்கவில்லை என்றே சிறிதரன் எம்பியும் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன