பொழுதுபோக்கு
பாட்டை அமர்கிட்ட கொடு, புது வரிகள் வரும்: வாலி அஜித்துக்கு எழுதிய பாடல்: கடைசியில் திருத்திய கங்கை அமரன்!
பாட்டை அமர்கிட்ட கொடு, புது வரிகள் வரும்: வாலி அஜித்துக்கு எழுதிய பாடல்: கடைசியில் திருத்திய கங்கை அமரன்!
தமிழ் சினிமாவில், தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட வாலி, பல முன்னணி நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள நிலையில், அஜித் படத்திற்காக இவர் எழுதிய ஒரு பாடலில், 2 வரிகளை திருத்தியுள்ளார் கங்கை அமரன். இந்த பாடல் பெரிய ஹிட்டு என்பது உங்களுக்கு தெரியுமா?தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என 5 தலைமுறை நடிகர்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்தவர் தான் கவிஞர் வாலி. எம்.எஸ்.விஸ்வநாதனால் அறிமுகம் செய்யப்பட்டு, கடைசிவரை வாலிப கவிஞர் எனற அடைமொழியுடன் வலம் வந்த வாலி, சில படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில், வெளியான ஹேராம் படத்தில் முக்கிய கேரக்டராக இருந்தார்.அதேபோல், கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து, சரோஜா, கோவா என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த இவர், கடந்த 2011-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை இயக்கி இருந்தார். அஜித்தின் வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும் மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.மேலும், த்ரிஷா, வைபவ், அஞ்சலி, ஆண்ட்ரியா, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, வாலி எழுதிய வாடா பின்லேடா என்ற பாடல் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது என்று சொல்லலாம். இந்த பாடல் பதிவின்போது நடிந்த சுவாரஸ்யமாக அனுபவத்தை இந்த பாடலை பாடிய பாடகர் க்ரிஷ் ஒரு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.வாடா பின்லேடா பாடலின் கடைசி வரிகள் ஆண் பாடுவது போன்று வேண்டும். அஜித் சார் பாடு முடிப்பது போல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று யுவன் சொல்ல, இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் இருவரும் க்ரிஷிடம் சொல்லி கவிஞர் வாலிக்கு போன் செய்யுமாறு கூறியுள்ளனர். வாலி 8 மணிக்கு போன் செய்தாலே கோபப்படும் சுபாவம் கொண்டவர். ஆனால் இவர் 9 மணிக்கு போன் செய்ய, போனை எடுத்த அவர், என்னயா இந்த நேரத்தில் போன் பண்ணிருக்க, என்று கேட்க, பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்று க்ரிஷ் கூறியுள்ளார்.நான் ஹஸ்பிட்டல்ல இருக்கேன்யா என்று வாலி சொல்ல, சாரி அங்கிள் ஹாஸ்பிட்டலில் இருந்து எதுக்காக போனை எடுத்தீங்க என்று க்ரிஷ் கேட்க, கையில் இருந்தது எடுத்தேன். ஒன்னு பண்ணு, பாடலை அமரிடம் கொடு (கங்கை அமரன்) அதற்கு ஏற்றபடி கடைசி வரியை அவன் மாற்றி கொடுப்பான் என்று வாலி கூறியுள்ளார். அதன்பிறகு வெங்கட் பிரபு தனது அப்பா கங்கை அமரனுக்கு போன் செய்து சொல்ல, கடைசி 2 வரிகளை கங்கை அமரன் மாற்றி கொடுத்துள்ளார். இந்த பாடல், மங்காத்தா படம் வெளியான சமயத்தில் பெரிய ஹிட் பாடலாக அமைந்த நிலையில், பலரின் ரிங்டோனாகவும் ஒலித்தது. இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
