பொழுதுபோக்கு
ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியா? என்னால முடியாது; தெறித்து ஓடிய முன்னணி நடிகர்கள்: எந்த படம் தெரியுமா?
ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியா? என்னால முடியாது; தெறித்து ஓடிய முன்னணி நடிகர்கள்: எந்த படம் தெரியுமா?
2000-ம் ஆண்டு மே 5-ம் தேதி வெளியாகி தமிழ்த் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” உணர்வுப் பூர்வமான கதைச்சோலை, அழகிய ஒளிப்பதிவும், இசையும், நடிப்பும் கலந்த ஒரு உயர்தர படமாகும். இயக்குநர் ராஜீவ் மேனனின் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இப்படத்தில், மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.இந்தப் படத்தில், மம்முட்டி நடித்த மேஜர் பாலா என்ற பாத்திரம், தனது காலில் ஏற்பட்ட இழப்பையும் மனதளவிலான காயங்களையும் சமாளித்து முன்னேறும் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரமாக நின்றது. இந்த வேடத்தில் அவர் மிக அமைதியாகவும், ஆழமான பார்வையுடன், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கும் பயணம் சுலபமானதாக இல்லை என்பது தான் இயக்குநர் ராஜீவ் மேனனின் சமீபத்திய பகிர்வில் வெளிவந்த உண்மை.ஒரு காலைக் இழந்த பின் மீண்டு வாழும் மனிதனாக நடித்துக் காட்ட வேண்டிய சவாலான கதாபாத்திரம் என்பதால், பல முன்னணி நடிகர்கள் இந்த வேடத்தில் நடிக்க மறுத்தனர். ஒரு வித்யாசமான உடலமைப்புடன் திரையில் தோன்ற வேண்டியிருக்கும் என்ற எண்ணம் சிலர் மனத்தில் இருந்தது. சிலர் அந்த மாதிரியான பாத்திரம் தங்கள் ‘ஹீரோ’ படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதி, நேரடியாகவே மறுத்துவிட்டனர். இதனால், அந்தக் கதாபாத்திரத்திற்கான சரியான நடிகரை தேர்வு செய்வது மிகவும் சிரமமான செயலாகி விட்டது என ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.அந்த நேரத்தில், மம்முட்டியின் பெயர் முன்வைக்கப்பட்டது. தன்னம்பிக்கையுடனும், கதையின் முக்கியத்துவத்தையும், பாத்திரத்தின் ஆழத்தையும் புரிந்து கொண்ட மம்முட்டி, எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். ஒரு நல்ல கதைக்கு எந்தக் கொடுமையான சவாலான பாத்திரமாக இருந்தாலும், அதை உணர்வோடு செய்ய வேண்டும் என்ற நடிகர் மனப்பான்மையை அவர் காட்டினார்.மேஜர் பாலா கதாபாத்திரம் இன்று தமிழ்சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பதற்குக் காரணம், மம்முட்டியின் ஆளுமை மட்டுமல்ல, அவர் அந்த வேடத்திற்கு அளித்த உயிர். இப்படத்தின் இயக்குநரின் பார்வையும், நடிகரின் பரந்த மனப்பான்மையும் இணைந்தபோதுதான் ஒரு அழுத்தமான கதாபாத்திரமாக அது உருவாக முடிந்தது. இது போன்ற சவாலான பாத்திரங்களை ஏற்றுக்கொள்வதில் நடிகர்களின் மனப்பான்மை மற்றும் இயக்குநரின் உறுதிப்பாடு என்பவை எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த அனுபவம் வெளிக்காட்டுகிறது.
