இலங்கை
செம்மணிப் புதைகுழிக்கு நீதிவழங்குவதில் உறுதி;
செம்மணிப் புதைகுழிக்கு நீதிவழங்குவதில் உறுதி;
ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!
செம்மணிப் புதைகுழிக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது என்று ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழிக்கு நீதி வழங்குவதில் எமது அரசாங்கம் உறுதியுடன்உள்ளது. இந்த விடயத்தில் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது. நீதியான நடவடிக்கைகள் அனைத்துக்கும் அரசாங்கம் உத்தரவாதம் வழங்கும். மறைப்பதற்கு ஏதும் எம்மிடமில்லை. இனிவரும் காலங்களில் இலங்கையில் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது. கொடூரமான அனுபவங்கள் மீண்டும் தோற்றம் பெறாத வகையில் நாம் நடந்துகொள்ள வேண்டும் – என்றார்.
