Connect with us

இலங்கை

வவுனியா வடக்கு பிரதேச சபையிலிருந்து வெளியேற முயன்ற உத்தியோகத்தர்கள்!

Published

on

Loading

வவுனியா வடக்கு பிரதேச சபையிலிருந்து வெளியேற முயன்ற உத்தியோகத்தர்கள்!

வவுனியா வடக்கு பிரதேச சபை  உத்தியோகத்தர்கள் நேற்று(01) தவிசாளரின் செயற்பாடுகளால் அலுவலகத்தில் இருந்து வெளியேற முற்பட்ட நிலையில், உப தவிசாளரின் கோரிக்கைக்கு இணங்க அச் செயற்பாட்டை கைவிட்டனர்.

வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் தொடர்ச்சியாக நிர்வாக செயற்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்துள்ளார்.

Advertisement

தவிசாளர் ஏற்படுத்தும் குழப்பங்களால் உத்தியோகத்தர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி, அலுவலகத்திலிருந்து வெளியேற எண்ணியிருந்தனர்.

தவிசாளரின் கடுமையான கையாள்வையும், ஆண் உத்தியோகத்தர்களுக்கு முகச்சவரம் செய்யவும் சப்பாத்து அணியவும் உத்தரவிடுவது, 

களஞ்சிய காப்பாளரை களஞ்சியசாலையில் வைத்திருப்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பதும், செயலாளருடன்  முரண்படுவதனாலுமே இந்நிலை தோன்றியுள்ளது.

Advertisement

இதனால், வவுனியா வடக்கு பிரதேச சபையில் குழப்பம் ஏற்பட்டு,  உத்தியோகத்தர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறி பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட இருந்துள்ளனர்.

எனினும், உப தவிசாளர் சஞ்சுதன் மற்றும் இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களிடம் வினாயாக 5 நாள் அவகாசம் கேட்டு, கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாக தெரிவித்தனர். 

இதற்குப்பின் உத்தியோகத்தர்கள் தமது செயற்பாட்டை கைவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன