பொழுதுபோக்கு
நாங்க சுட்ட முதல் பாட்டு; சென்னை 28 ஹிட் பாடல், எங்க அப்பா படத்தில் இருந்து சுட்டது: யுவன் – வெங்கட் பிரபு ஓபன் டாக்!
நாங்க சுட்ட முதல் பாட்டு; சென்னை 28 ஹிட் பாடல், எங்க அப்பா படத்தில் இருந்து சுட்டது: யுவன் – வெங்கட் பிரபு ஓபன் டாக்!
யுவன் ட்ரக்ஸ், கிங் ஆஃப் பிஜிஎம் என இன்றைக்கும் கொண்டாடப்படும் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இன்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது, 45வது பிறந்த நாளைக் (HBD Yuvan Shankar Raja) கொண்டாடுகின்றார். தனது இசையால் பலரையும் தனது, ரசிகர்கள் பட்டாளத்தில் கட்டுக் கொண்டுள்ளார். தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் இல்லாமல், இசையின் மொழி புரிந்த பலருக்கும் தனிமையில் துணையாக இருந்து அவர்களின் துயர் துடைப்பவராக இருக்கின்றார்.இசைஞானி இளையராஜாவின் மகன் என்பதால் மட்டும் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் கால் பதிக்கவில்லை. தனது திறமையால் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மேலும் ரோஜா படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பாளராக அறிமுகமானது மட்டும் இல்லாமல், அன்றைக்கு உச்சத்தில் இருந்த இளையராஜாவை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார்.இதனை அன்றைக்கு பதின்பருவத்து இளைஞனாக இருந்த யுவன் சங்கர் ராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ஏ.ஆர்.ரஹ்மானை இசையில் விஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தில், இசை அமைப்பாளராக வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கிக் கொண்டார்.அதன் முன்னர் வரை அவரது கனவாக இருந்தது, பைலட் ஆகவேண்டும் என்பதுதான். தனது தந்தையை ஒருவர் உலுக்கிவிட்டார். அவரை விஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தில் தனது கனவை விட்டுவிட்டு, வைராக்கியத்தை நெஞ்சில் சுமந்து, இசையமைப்பாளராக மாறியவர். தொடக்கத்தில் இவர் இசை அமைத்த படங்கள் பெரிதும் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான, பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டும் இல்லாமல், மாபெரும் ஹிட்டாக அமைந்தது.அன்னக்கிளி படத்தில் இளையராஜா அறிமுகமானபோது வானொலியில் எப்படி, அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தொடர்ந்து ஒலித்ததோ, அதேபோல், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல் என அனைவரும் கூற, தனது தந்தைக்கு பெருமை சேர்த்தார்.அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட். இளையராஜாவுக்குப் பின்னர் ஏ.ஆர். ரஹ்மானிடம் தயாரிப்பாளர்கள் எப்படி வரிசை கட்டி நின்றார்களோ, அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் கம்போசிங்கிற்காக தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டு இருந்தனர்.இந்நிலையில் ஒரு மேடையில் வெண்காட்ப்ரவது அவர்கள் யுவனிடம் அப்பாவிடம் இடருந்து எந்தெந்நத பாடல்களை திருடினாய் என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்க்கு யுவன் பதிலளிக்கும் போது, “‘தென்றல் வந்து தீண்டும் போது’ என்ன வண்ணமோ என்ற பாடலில் இருந்து தான் நான் ‘இது வரை இல்லாத உணர்விது’ என்ற பாடலை இசையமைத்தேன். அதே போல ‘யாரோ யாருக்கும் நெஞ்சம் யாரோ’ என்ற பாடலும் ‘ஏதோ மோகம் ஏதோ ராகம்’ என்ற பாடலில் இருந்து தான் எடுத்தேன். காபி அடிக்கலாம் அனால் அது வெளியே தெரிய கூடாத அளவிற்கு இருக்க வேண்டும்.” என்று கலாய்த்த படி கூறினார்.
