இலங்கை
கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு!
கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு!
பொல்பிதிகம, பதிரன்னேகமப் பகுதியில் விவசாயக் கிணற்றில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்னாலுள்ள பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்துள்ளான் எனப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொல்பிதிகமப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
