Connect with us

இலங்கை

மாகாணத் தேர்தலை நடத்த பின்னடிக்கிறது அரசாங்கம்!

Published

on

Loading

மாகாணத் தேர்தலை நடத்த பின்னடிக்கிறது அரசாங்கம்!

ஹர்ஷன ராஜகருணா குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. மாகாணசபைச் சட்டத்தில் இலகுவாகத் திருத்தம் செய்யமுடியும். ஆகையால் விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். அதற்கு சகலரதும் ஒத்துழைப்பையும் பெற முயற்சிக்கின்றோம். இது அனைவரையும் இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்குவதற்கான பயணம் அல்ல.

எதிர்க்கட்சிகளை மௌனமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மாகாணசபைத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்துக்குள்ள பெரும்சவால். பிரதேச சபைத்தேர்தலில் அரசாங்கம் பல இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. இந்த அச்சத்தால் மாகாணசபைத் தேர்தல் மேலும் காலம் தாழ்த்தப்படக்கூடும்.
விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
கொள்கை ரீதியில் எம்மோடு இணையக்கூடிய அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்கத் தயாராக இருக்கின்றோம்- என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன