இலங்கை
நீலநிற பஸ்ஸை வைத்து ஆட்சி நடத்துகிறது அரசு; சந்திம வீரக்கொடி தெரிவிப்பு!
நீலநிற பஸ்ஸை வைத்து ஆட்சி நடத்துகிறது அரசு; சந்திம வீரக்கொடி தெரிவிப்பு!
நீலநிற பஸ்ஸைக் காண்பித்து இந்த அரசாங்கம் ஆட்சி நடத்துகின்றது.அந்த நீல நிற பஸ் ஒரு தரப்பினரை மட்டுமே இலக்கு வைத்துப் பயணிக்கின்றது.
பொலிஸ், நீதித்துறைச் சுதந்திரத்தில் தலையிடாது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம். அன்று நாடாளுமன்றத்தில் ஆலோசனை தெரிவுக் குழுக்களில் அதற்காக நாம் குரல் கொடுத்தோம். அன்றைய கால கட்டத்தில் மாகந்துரே மதுஷ் போன்றோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவ்வாறு ஊடகப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படவில்லை. பாதாள உலகக் குழுக்களுடன் எதிர்க்கட்சிகளுக்குத் தொடர்புள்ளது என்று அரசாங்கம் கூறியது. அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஆதாரம் இன்றிக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது – என்றார்.
