இலங்கை
பதுளை – பல்லேகெட்டுவ பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
பதுளை – பல்லேகெட்டுவ பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
பதுளை – பல்லேகெட்டுவ பொலிஸ் தோட்டப் பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேற்று திங்கட்கிழமை (01) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதோடு,உயிரிழந்தவர் யார் என அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் பதுளை மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
