இலங்கை
விஷவாயு கசிவு – 30 பேர் மருத்துவமனைகளில் சேர்ப்பு!
விஷவாயு கசிவு – 30 பேர் மருத்துவமனைகளில் சேர்ப்பு!
புசல்லாவ, டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 30 பேர் பாதிக்கப்பட்டு கம்பளை மற்றும் வஹுகபிட்டிய மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புசல்லாவ, டெல்டா பெருந்தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் இங்கு நீர் சுத்திகரிக்க குலோரின் வாயு பயன்படுத்தப்படுகிறது.
அந்தக் குலோரின் வாயு கசிவு காரணமாக இப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, சுத்திகரிப்பு தொட்டிக்கு அண்மையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதோடு, அருகில் உள்ள தேயிலைச் செடிகளும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
குறித்த நீர் விநியோகத் திட்டத்தின் ஊடாக புசல்லாவ, பாரதெக்க ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
