Connect with us

பொழுதுபோக்கு

கேப்டனுக்கு மச்சான் முறை, கமல்ஹாசனுக்கு ரீல் மகன்; இந்த சிறுவன் பிரபல நடிகைக்கு தம்பி: யார்னு கண்டுபிடிங்க!

Published

on

Tamil Cinema Captain Mu

Loading

கேப்டனுக்கு மச்சான் முறை, கமல்ஹாசனுக்கு ரீல் மகன்; இந்த சிறுவன் பிரபல நடிகைக்கு தம்பி: யார்னு கண்டுபிடிங்க!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சிறப்பாக நடித்து, பெரிய நடிகராக மாறியவுடன் வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையிலான ஒரு நடிகர் தான் டின்கு. இவர் விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்1984-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் டின்கு. இந்த படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், டின்குவும் இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பாக்ஸ்ஆபீஸில் தோல்வியை சந்தித்திருந்தாலும், அடுத்து விஜயகாந்தின் எவர்கிரின் படத்தில் நடித்து அசத்தியவர் டின்கு.1984-ம் ஆண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் வைதேகி காத்திருந்தாள். இளையராஜா போட்டு வைத்திருந்த பாடல்களுக்கு ஏற்றபடி கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், விஜயகாந்த், ரேவதி, சுரேஷ், ராதாரவி, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக இருக்கிறது. காதலியின் நினைவாக கடைசிவரை வாழ்ந்து இறக்கும் வெள்ளச்சாமி கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருப்பார்.இந்த படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில் விஜயகாந்த் மற்றும் அவரது காதலிக்கு பொதுவான ஒரு சிறுவனாக நடித்திருந்தவர் தான் டின்கு. இந்த படத்தில் அவர் விஜயகாந்தின் காதலியிடம், அடிக்கடி போங்கடி நீங்களும் உங்க கல்யாணமும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார், ஆனால் இறுதியாக அவர் இறந்தவுடன், விஜயகாந்தை குச்சியால் அடித்துவிட்டு, போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என்று அழுதுகொண்டே சென்றுவிடுவார். ப்ளாஷ்பேக் காட்சியில் வந்தாலும் டின்கு இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.இந்த படத்திற்கு பின் ஜப்பானில் கல்யாண ராமன், உயிரே உனக்காக, ஆளப்பிறந்தவன், வருஷம் 16, தேவர் மகன், என ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர் கடைசியாக 2008-ம் ஆண்டு சரோஜா என்ற படத்தில் நடித்திருந்தார். திருமதி செல்வம், கனா காணும் காலங்கள், லட்சுமி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ள இவர், நடிகை சோனியா போஸ் வெங்கட்டின் தம்பி ஆவார். போஸ வெங்கட், கன்னிமாடம், சார் என இரு படங்களை இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ள நிலையில், பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.தலைநகரம் படத்தில் அவர் தனது மனைவியுடன் இணைந்து நடித்திருப்பாது. கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்தில் வில்லனாக நடித்திருந்த போஸ் வெங்கட் சிங்கம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன