இந்தியா
பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு… முழு விவரம் இதோ…

பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு… முழு விவரம் இதோ…
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவை முன்னிட்டு இம்மாதம் 12-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா ஷரீப் பெரிய கந்தூரி விழா 02.12.2024 முதல் 15.12.2024 வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் 11-ஆம் தேதி இரவு புறப்பட்டு 12-ஆம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாநில நிறுவனங்களுக்கும் வருகிற 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுமுறையை ஈடுசெய்திடும் விதமாக எதிர்வரும் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.