வணிகம்
டிவி விளம்பரங்களில் ஜொலித்த ஷாருக் கான், தோனி: 2025 முதல் பாதியில் அதிகம் தோன்றிய ஸ்டார்கள்!
டிவி விளம்பரங்களில் ஜொலித்த ஷாருக் கான், தோனி: 2025 முதல் பாதியில் அதிகம் தோன்றிய ஸ்டார்கள்!
2025-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், இந்தியத் தொலைக்காட்சிகளை ஆட்சி செய்தது வேறு யாருமல்ல, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தான்! TAM AdEx வெளியிட்ட அறிக்கையின்படி, தினமும் சராசரியாக 27 மணிநேரம் விளம்பரங்களில் தோன்றி, டிவி திரைகளில் அதிகம் பார்க்கப்பட்ட பிரபலமாக இடம்பிடித்துள்ளார். இவருக்கு போட்டியாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ் தோனி தினமும் 22 மணி நேரம் விளம்பரங்களில் தோன்றி 2-வது இடத்தை பிடித்தார். இவர்களைத் தொடர்ந்து, அக்ஷய் குமார், ரன்வீர் சிங், மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரும் முதல் 5 இடங்களில் உள்ளனர்.பிரபலங்களின் விளம்பரங்களில் என்ன ஸ்பெஷல்?திரை நட்சத்திரங்களின் ஆதிக்கம்: பிரபலங்கள் நடித்த விளம்பரங்களில், திரைப்பட நட்சத்திரங்கள் 74% பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளனர். விளையாட்டு வீரர்கள் 19% மற்றும் டிவி நட்சத்திரங்கள் 7% பங்களித்துள்ளனர்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஅதிகம் விற்கப்படும் பொருட்கள்: பிரபலங்கள் அதிகம் விளம்பரப்படுத்தியது உணவு மற்றும் பானங்கள் (23%). இதற்கு அடுத்தபடியாக, தனிநபர் பராமரிப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளன. கழிப்பறை மற்றும் தரை சுத்திகரிப்பான்கள், கார்பனேட்டட் குளிர்பானங்கள், மற்றும் சோப்புகள் ஆகிய பொருட்களே அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.ஆண்களின் ஆதிக்கம்: உணவு மற்றும் பான விளம்பரங்களில் ஆண் பிரபலங்களும், தனிநபர் பராமரிப்பு விளம்பரங்களில் பெண் பிரபலங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.புதிய ட்ரெண்ட்: சுவாரசியமாக, இ-காமர்ஸ் கேமிங் துறை மட்டும் 38 வெவ்வேறு பிரபலங்களை விளம்பரங்களில் பயன்படுத்தி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.ஜோடி விளம்பரங்கள்: பிரிக்க முடியாத பந்தம்!விளம்பரத் துறையில், பிரபல தம்பதியினர் எப்போதும் தனி இடம் பிடித்துள்ளனர். தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் மற்றும் அனுஷ்கா ஷர்மா-விராட் கோலி ஜோடிகள், தம்பதியினர் விளம்பரங்களில் கிட்டத்தட்ட 30% பங்களித்துள்ளனர். அக்ஷய் குமார்-டிவிங்கிள் கன்னா மற்றும் ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடிகளும் இந்த பட்டியலில் முக்கியமாக இடம்பெற்றுள்ளனர்.2023-ஐ ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த பிரபல விளம்பரங்கள் 12% குறைந்திருந்தாலும், முதல் 10 வகைகளில் மட்டும் 40% விளம்பரங்கள் குவிந்து உள்ளன. இது, பிரபலங்களின் ஈர்ப்பு சக்தி இன்னும் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. அதே சமயம், விளம்பர செலவுகள் அதிகரித்து வருவதால், பிராண்டுகளுக்கு இது சவாலாகவும் மாறியுள்ளது.
