Connect with us

சினிமா

ஜப்பானில் நடந்த திருமணம்.. கண்ணீர் சிந்திய நெப்போலியனின் சம்மந்தி.! இதுதான் காரணமா.?

Published

on

Loading

ஜப்பானில் நடந்த திருமணம்.. கண்ணீர் சிந்திய நெப்போலியனின் சம்மந்தி.! இதுதான் காரணமா.?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நெப்போலியன், சமீபத்தில் தன் குடும்பத்தில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வால் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றார். அது அவருடைய மகன் தனுஷின் திருமணத்தால் தான்.இந்த திருமணம், ஜப்பானில் மிகுந்த கோலாகலத்துடன் நடந்ததாகவும், இவ்விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த நிகழ்வுக்கு மட்டுமல்லாமல், அந்த விழாவைத் தொடர்ந்து நெப்போலியனின் சம்மந்தி, அதாவது மருமகளான அக்‌ஷயாவின் தாயார் அளித்த ஒரு பேட்டி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி வருகின்றது.நெப்போலியனின் மகன் தனுஷ், சுகாதார சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்காக ஒரு சிறந்த வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க அவரது குடும்பம் எடுத்த முடிவு சமூக ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பலரிடையே பாராட்டுக்களை பெற்றது.இந்த திருமண விழா ஜப்பானில் மிகவும் அழகாக நடைபெற்றது. இந்நிலையில் தற்பொழுது நெப்போலியனின் மருமகளான அக்ஷயாவின் பெற்றோர் அளித்த ஒரு நேர்மையான பேட்டி, இணையத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.அந்த பேட்டியில் அவர், “நான் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவள். என் பள்ளிப் படிப்பு மும்பையில் நடந்ததால் தான் எனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளும் தெரியும்.” என்றார். மேலும், “நெப்போலியன் வீட்டில் எல்லோரும் எங்களை மிகவும் பாசத்துடனும் மரியாதையுடனும் ஏற்றுக் கொண்டார்கள். அத்துடன் திருமணத்தின் போது நாங்கள் சிந்திய tears ஆனந்த கண்ணீர். ஒரு நல்ல குடும்பத்தில் எங்கள் பெண்ணை திருமணம் செய்து வைத்தோம் என்பதன் வெளிப்பாடுதான் அது!” என உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த பேட்டி, சமூக வலைத்தளங்களில் பலரது மனதையும் தொட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன