Connect with us

இந்தியா

TN Half Yearly Exam 2024 : வெள்ள பாதிப்பால் தள்ளிப்போகும் அரையாண்டு தேர்வு? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Published

on

அரையாண்டு தேர்வு எப்போது தொடங்கும்..? பள்ளிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை..? வெளியான முக்கிய அறிவிப்பு!

Loading

TN Half Yearly Exam 2024 : வெள்ள பாதிப்பால் தள்ளிப்போகும் அரையாண்டு தேர்வு? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அரையாண்டு தேர்வு எப்போது தொடங்கும்..? பள்ளிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை..? வெளியான முக்கிய அறிவிப்பு!

Advertisement

பொதுவாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கப்படும். அதேபோல இந்தாண்டும் வருகின்ற டிசம்பர் 16ம் தேதி திங்கள் கிழமை அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெறுகின்றது. இதனால் அரையாண்டு தேர்விற்கான மாணவர்களை வேகமாக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடும் மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலுர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இதனால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி, தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

Advertisement

இந்நிலையில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அரையாண்டு தேர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “
வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் ஒன்பதாம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், அந்த பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுதுவதற்கு அறிவுறுத்தி இருக்கிறோம். இது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். டிசம்பர் 2ஆம் தேதி தொடங்க இருந்த செய்முறை தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன