Connect with us

விளையாட்டு

IND vs UAE LIVE Score: 137 ரன்னுக்கு சுருண்ட யு.ஏ.இ… வெற்றி இலக்கை வெறித்தனமாக துரத்தும் இந்தியா!

Published

on

India vs United Arab Emirates U19 Asia Cup 2024 LIVE Cricket Score ind u19 vs uae u19 today t20 match live scorecard online in tamil

Loading

IND vs UAE LIVE Score: 137 ரன்னுக்கு சுருண்ட யு.ஏ.இ… வெற்றி இலக்கை வெறித்தனமாக துரத்தும் இந்தியா!

8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs United Arab Emirates U19 Asia Cup 2024, LIVE Cricket Scoreஇந்நிலையில், ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியைப் பெற்றது. இதனையடுத்து, ஜப்பானுக்கு எதிராக நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.  இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் – ஜப்பான், இந்தியா – யு.ஏ.இ அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி கண்டால் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறும். பாகிஸ்தான் அணி 2 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளதால் அந்த அணி ஏறக்குறையை அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.இந்தியா vs  யு.ஏ.இ மோதல் இந்த நிலையில், இந்தியா – யு.ஏ.இ அணிகள் மோதும் ஆட்டம் ஷார்ஜா இன்று புதன்கிழமை நடைப்பெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற யு.ஏ.இ அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. யு.ஏ.இ அணி 39 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள்  எடுத்துள்ளது. இந்திய அணி  மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தி வரும் நிலையில், யு.ஏ.இ ரன்கள் சேர்க்க திணறி வருகிறது. இரு அணிகளின் ஆடும் லெவன்  வீரர்கள் பட்டியல்: இந்தியா: ஆயுஷ் மத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, ஆண்ட்ரே சித்தார்த் சி, முகமது அமான் (கேப்டன்), கே.பி.கார்த்திகேயா, நிகில் குமார், ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் ராஜ், சமர்த் நாகராஜ், சேத்தன் சர்மா, யுதாஜித் குஹா. யு.ஏ.இ: அக்ஷத் ராய், ஆர்யன் சக்சேனா, யாயின் ராய், ஈதன் டிசோசா, முஹம்மது ராயன் கான், அயன் அப்சல் கான் (கேப்டன்), நூருல்லா அயோபி, முடித் அகர்வால் (விக்கெட் கீப்பர்), உத்திஷ் சூரி, ஹர்ஷ் தேசாய், அலி அஸ்கர் ஷம்ஸ்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன