Connect with us

தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பில் சைபர் தாக்குதல் அபாயம்: அரசு எச்சரிக்கை – பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Published

on

WhatsApp

Loading

வாட்ஸ்அப்பில் சைபர் தாக்குதல் அபாயம்: அரசு எச்சரிக்கை – பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களே, உங்கள் தனியுரிமைக்கு ஆபத்து வரலாம், உஷார்! இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனமான CERT-In (கணினி அவசரகால மீட்புக் குழு) வாட்ஸ்அப்பில் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதைக் கண்டறிந்து, அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் குறைபாடு மூலம் ஹேக்கர்கள் உங்கள் அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களைத் திருட வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.என்ன நடந்தது?iOS, Mac சாதனங்களில் உள்ள குறிப்பிட்ட வாட்ஸ்அப் பதிப்புகளில் இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் மொபைலில் இணைக்கப்பட்ட மெசேஜ்களை வாட்ஸ்அப் சரியாகக் கையாளாததால் இந்த சிக்கல் உருவாகிறது. இதன்மூலம், தாக்குதலாளர்கள் உங்கள் போனில் உள்ள எந்த URL-ல் இருந்தும் தகவலைப் பெற முடியும். இதனால், உங்கள் ரகசியத் தகவல்கள் திருடப்படலாம்.CERT-In கூறுகையில், இந்தக் குறைபாடு சமீபத்தில் கண்டறியப்பட்ட ஆப்பிள் இயங்குதள குறைபாட்டுடன் இணைந்து, “இலக்கு வைக்கப்பட்ட அதிநவீன தாக்குதல்களுக்கு” வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் மிகவும் ஆபத்தானவை என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.பாதுகாப்பாக இருப்பது எப்படி?உடனடி அப்டேட்: CERT-In நிறுவனம், உடனடியாக வாட்ஸ்அப் செயலியை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்யும்படி வலியுறுத்தியுள்ளது. இதுதான் இந்தக் குறைபாட்டில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எளிய வழி. அப்டேட் செய்யாத வரை, உங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய இணைப்புகள் (links) அல்லது மெசேஜ்களைத் திறக்காமல் இருப்பது நல்லது. இந்தச் சிக்கல் குறித்து மெட்டா மற்றும் வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால், விரைவில் பாதுகாப்பு அப்டேட்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய அம்சம் வருகிறது!இந்த பாதுகாப்புப் பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு புதிய அம்சத்தைக் கொண்டு வர உள்ளது. இன்ஸ்டாவில் உள்ளதுபோல, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் Close Friends என்ற அம்சத்தை சேர்க்கும் பணியில் வாட்ஸ்அப் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், உங்கள் ஸ்டேட்டஸ்களை நீங்கள் விரும்பும் நண்பர்களுடன் மட்டுமே பகிர முடியும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன