இலங்கை
மருத்துவர் நியமனங்கள் விரைவில் வழங்கப்படும்; சுகாதாரப் பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
மருத்துவர் நியமனங்கள் விரைவில் வழங்கப்படும்; சுகாதாரப் பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
மருத்துவர்களுக்கான நியமனங்கள் புதிதாக வழங்கப்படவுள்ளன. சுகாதாரப் பணிப்பாளர்களால் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று சுகாதார, ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நியமானங்களில் நாம் அரசியல் ரீதியில் தலையிடப்போவதில்லை. சில அதிகாரிகள் எமக்குச் சரியான தகவல்களை வழங்குவதில்லை. இதனாலேயே ஒரு சிலர் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றும் நிலை காணப்படுகின்றது.
தமக்குரிய பொறுப்புகளை மீறுவோர் அல்லது தொடர்பற்ற விடயங்களில் தலையிட்டுப் பிரச்சினைகளை உருவாக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.
