தொழில்நுட்பம்
ஸ்மார்ட்ஃபோன் வாங்க சரியான நேரம்: சியோமி தீபாவளி ஆஃபர்; ரெட்மி 15 5ஜி போனுக்கு ரூ.3,000 அதிரடி தள்ளுபடி!
ஸ்மார்ட்ஃபோன் வாங்க சரியான நேரம்: சியோமி தீபாவளி ஆஃபர்; ரெட்மி 15 5ஜி போனுக்கு ரூ.3,000 அதிரடி தள்ளுபடி!
இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில், சியோமி இந்தியா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு முன்கூட்டியே சிறப்பு விலைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம், பண்டிகை காலத்தின் கடைசி நிமிட விலை மாற்றங்களை தவிர்க்கலாம். இந்தச் சலுகைகள் ரெட்மி நோட் 14 சீரிஸ், ரெட்மி 14C மற்றும் ரெட்மி 15, 5ஜி உள்ளிட்ட பிரபலமான மாடல்களுக்குப் பொருந்தும். இந்தச் சலுகையின் கீழ், அதிகபட்சமாக ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விலைகள் தீபாவளி காலம் முழுவதும் இருக்கும் என்று சியோமிஉறுதியளித்துள்ளது.இந்த சிறப்பு விலை அறிவிப்பானது, கடைசி நேர கூட்டத்தையும், விலைகளில் ஏற்படும் குழப்பத்தையும் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே ஷாப்பிங் செய்ய விரும்புபவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தச் சலுகையில், புதிதாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கான குறைந்த விலை போன்கள் முதல், மேம்பட்ட அம்சங்கள் கொண்ட பிரீமியம் மாடல்கள் வரை அனைத்தும் அடங்கும்.சியோமி இந்தியாவின் சிறப்பு விலை விவரங்கள்:குறிப்பு: ரெட்மி நோட் 14 வேரியன்ட் விலைகள் ஆன்லைன் பண்டிகை விற்பனை நிகழ்வுகளின்போது அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
