Connect with us

இந்தியா

“2.5 வயதில் உலக சாதனை” – கை நுனியில் 195 நாடுகளின் பெயர்… ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன்…

Published

on

2.5 வயதில் உலக சாதனை

Loading

“2.5 வயதில் உலக சாதனை” – கை நுனியில் 195 நாடுகளின் பெயர்… ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன்…

2.5 வயதில் உலக சாதனை

Advertisement

2.5 வயது குழந்தை தனது அசாதாரண திறமையால் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. முதலில் இந்த குழந்தை 10 முதல் 20 நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் சரியாக காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்ததாக 50 நாடுகளுக்கும், பின்னர் உலகில் உள்ள அனைத்து 195 நாடுகளையும் சரியாக சொல்லி தனது அறிவை விரிவுபடுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 2.5 வயது குழந்தை தர்ஷிக் சோலங்கி. தனது அசாதாரண திறமையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஷாகப்பட்டினத்தின் தாபா கார்டனில் 12 டிசம்பர் 2021 அன்று பிறந்த தர்ஷிக் சோலங்கி, தனது அறிவால் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

Advertisement

தர்ஷிக்கின் பெற்றோர்களான சோலங்கி விஷால் மற்றும் சோலங்கி ப்ரியா சிறுவயதிலேயே அவரது சிறப்புத் திறன்களை உணர்ந்து தர்ஷிக்கை ஊக்கப்படுத்தி உள்ளனர். இரண்டு வயதில், தர்ஷிக் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் கொடிகளை வைத்து அதன் பெயரை சரியாக சொல்லி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஆரம்பத்தில், 10 முதல் 20 நாடுகளின் கொடிகள் மற்றும் பெயர்களை சரியாக கண்டுபிடித்த தர்ஷிக், பின்னர், விரைவாக 50 நாடுகளின் கொடிகளை சரியாக காண்பித்து, இறுதியாக உலகில் உள்ள அனைத்து நாடுகளையும், அதாவது உலகில் இருக்கும் 195 நாடுகளின் கொடியையும் சரியாக காண்பித்துள்ளது.

Advertisement

இரண்டு மாதங்களில், தர்ஷிக் கொடிகள் மட்டுமின்றி, நாடுகளின் தலைநகரங்களையும் சரியாக சொல்லி தேர்ச்சி பெற்றார். தனது தனித்துவமான திறனால் அங்கீகரிக்கப்பட்ட தர்ஷிக், பின்னர் உலக சாதனை புத்தகத்தால் கௌரவிக்கப்பட்டார். தர்ஷிக்கின் இந்த சிறப்புவாய்ந்த திறனால் அவரது குடும்பத்தினர் பெருமிதம் கொள்கின்றனர்.

இன்டெல்லி மினி மைண்ட்ஸ் பள்ளியின் ஆசிரியர்கள் தர்ஷிக்கை திறமையான மற்றும் சுறுசுறுப்பான குழந்தையாக பார்க்கிறார்கள், அவர் பல விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளனர். தர்ஷிக்கின் தந்தை சோலங்கி விஷால் ஸ்டேஷனரி வியாபாரம் செய்கிறார், அவரது தாயார் பிரியா சோலங்கி ஒரு இல்லத்தரசி.

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான ஆற்றல் இருப்பதாகவும், சரியான ஊக்கத்துடன் சாத்தியமற்றதைக் கூட சாத்தியமாக்க முடியும் என்று நம்புவதாக தர்ஷிக்கின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தர்ஷிக் சோலங்கியின் இந்த அசாதாரண பயணம், அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவு, ஒருவரின் வெற்றிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கிறது. இவரது கதை பலருக்கு ஊக்கமளிப்பதாக மட்டுமல்லாமல், குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன