Connect with us

தொழில்நுட்பம்

ஸ்டைல்+குவாலிட்டி; 1.2 மீ. கேபிளுடன்.. சோனியின் முதல் டைப்-சி இயர்போன் இந்தியாவில் அறிமுகம்!

Published

on

Sony IER-EX15C USB-C wired earphones

Loading

ஸ்டைல்+குவாலிட்டி; 1.2 மீ. கேபிளுடன்.. சோனியின் முதல் டைப்-சி இயர்போன் இந்தியாவில் அறிமுகம்!

சோனி நிறுவனம், தனது ஆடியோ தயாரிப்பு வரிசையை இந்தியாவில் விரிவுபடுத்தியுள்ளது. அதன் முதல் டைப்-C வயர்டு இயர்போன் ஆன சோனி IER-EX15C-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்போன், 5 மி.மீ டிரைவர், உயர்-இணக்கமான டயாஃப்ரம் ஆகியவற்றை கொண்டிருப்பதால், ஆழமான பேஸ் மற்றும் தெளிவான குரல் ஒலி ஆகியவற்றை வழங்குகிறது. அதே நேரத்தில், இது மிகவும் இலகுவாகவும், பயன்படுத்த வசதியாகவும் இருக்கும் என சோனி தெரிவித்துள்ளது. இது டைப்-C இயர்போன் என்பதால், நவீன ஸ்மார்ட்போன்கள், டேப்லெட், லேப்டாப்கள் மற்றும் டைப்-C போர்ட் கொண்ட பிற சாதனங்களுடன் இணக்கமாக இருக்கும்.அதிகபட்ச சில்லறை விலை (MRP): ரூ.2,490சிறந்த விற்பனை விலை (Best Buy): ரூ.1,990கிடைக்கும் நிறங்கள்: கருப்பு, வெள்ளை, நீலம், இளஞ்சிவப்புஇந்த இயர்போன்கள் தற்போது சோனி சென்டர், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ‘Shop at SC’ வலைத்தளத்திலும் விற்பனைக்கு கிடைக்கின்றன.சிறப்பம்சங்கள்:சோனி IER-EX15C இலகுரக, சிறிய வடிவமைப்புடன் வருகிறது. இதில் 5 மி.மீ டிரைவர், ஆழமான பேஸ் மற்றும் தெளிவான குரல் ஒலிக்காக உயர்-இணக்கமான டயாஃப்ரம் ஆகிய அம்சங்கள் உள்ளன. இது சிக்கல்-எதிர்ப்பு ‘செரேட்டட்’ கேபிளையும், கேபிளைச் சரிசெய்ய ஒரு அட்ஜஸ்டரையும் கொண்டுள்ளது. 3 வெவ்வேறு அளவுகளில் ஹைப்ரிட் சிலிகான் டிப்ஸ் உடன் வருகிறது.இந்த இயர்போனில் இன்லைன் ரிமோட் உள்ளது. இதில் வால்யூம் அட்ஜஸ்ட்மென்ட், மல்டி-ஃபங்ஷன் பட்டன் மற்றும் மைக்ரோஃபோன் போன்ற முக்கிய கட்டுப்பாடுகள் உள்ளன. பயனர்கள் இந்த பட்டன்களைக் கொண்டு பாடல்களை ப்ளே அல்லது பாஸ் செய்யலாம், அடுத்த பாடலுக்குச் செல்லலாம், அழைப்புகளை மேற்கொள்ளலாம், வாய்ஸ் அசிஸ்டன்டை இயக்கலாம் அல்லது மைக்கின் ஒலியை முடக்கலாம். மேலும், இதில் உள்ள கேபிள் ஸ்லைடர் மற்றும் அட்ஜஸ்டர் ஆகியவை கேபிளின் நீளத்தைத் தேவைக்கேற்ப மாற்றவும், சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகின்றன.சோனி IER-EX15C: தொழில்நுட்ப விவரங்கள்டிரைவர்: 5 மி.மீமாடல்: வயர்டு இயர்போன்இணைப்பு: டைப்-Cஹெட்போன் வகை: Closed in-earகேபிள் வகை: Y-வகைகேபிள் நீளம்: சுமார் 1.2 மீட்டர்மைக்ரோஃபோன்: ஓம்னிடைரெக்ஷனல்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன