Connect with us

இந்தியா

லண்டனில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு; பெங்களூரு குழு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு

Published

on

Stalin with Bengaluru

Loading

லண்டனில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு; பெங்களூரு குழு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு

லண்டனில் உள்ள எஸ்.ஓ.ஏ.எஸ் (SOAS) கேலரியில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த ‘ரீகிளெய்ம் கான்ஸ்டிடியூஷன்’ என்ற அமைப்பு கண்காட்சி அரங்குகளை அமைத்துள்ளது.ஆங்கிலத்தில் படிக்க:இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான ஆரம்ப காலகட்டங்கள், அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் மற்றும் ஆவணக் காப்பகப் பொருட்கள் போன்றவற்றை இந்த நிகழ்வு காட்சிப்படுத்துகிறது. மேலும், இது தொடர்பாக உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.‘ரீகிளெய்ம் கான்ஸ்டிடியூஷன்’ அமைப்பைச் சேர்ந்த வினய் குமார், “அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் அரசியல் நிர்ணய சபையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டதாக சில சமயங்களில் எண்ணம் ஏற்படுகிறது. ஆனால், இதற்கு சாதாரண மக்களும் நிறைய பங்களித்துள்ளனர். அரசியல் நிர்ணய சபைக்கு சாதாரண குடிமக்கள் அனுப்பிய ஆயிரக்கணக்கான கடிதங்கள் இங்கே உள்ளன” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அந்த அமைப்பு சில பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளது. அவற்றில் முகவுரை அச்சிடப்பட்ட பைகள் மற்றும் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்த 15 பெண் உறுப்பினர்களின் உருவங்கள் அடங்கிய ‘பொம்மை ஹப்பா’ பொம்மைகள் (அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன், பேகம் அய்ஸாஸ் ரசூல், துர்காபாய் தேஷ்முக், ஹன்சா மேத்தா, கமலா சௌத்ரி, லீலா ராய், மாலதி சௌத்ரி, பூர்ணிமா பானர்ஜி, ராஜ்குமாரி அம்ரித் கௌர், ரேணுகா ராய், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபளானி, விஜயலட்சுமி பண்டிட், மற்றும் ஆன்னி மாஸ்கிரீன்) போன்றவை குறிப்பிடத்தக்கவை.மேலும், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட முதல் தபால் தலை முதல் இப்போது வரை அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கருப்பொருள்களைக் கொண்ட அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சல் கலைப் பொருட்களின் தொகுப்பும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த 200 அஞ்சல் கலைப் பொருட்களின் தொகுப்பு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் ஒரு கண்காட்சியாக மாறும் என்று குமார் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை எங்களைச் சந்தித்தார். எங்கள் பணியில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. நாங்கள் செய்து வரும் பணிகள் குறித்தும் சில தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டோம்” என்றார்.அத்துடன், காலனித்துவ நீக்கத்தின் கண்ணோட்டத்தில் அரசியலமைப்புச் சட்டங்களைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்களைச் சந்திக்கவும் இந்த குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் குமார் தெரிவித்தார். “பிரிட்டிஷ் மன்னரை அங்கீகரிக்கும் பல அரசியலமைப்புச் சட்டங்கள் உள்ளன. முழுமையான சுயராஜ்யத்திற்கு அழைப்பு விடுத்த மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களின் முக்கியத்துவம் இங்கு கவனிக்கத்தக்கது. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் மன்னரை அங்கீகரிக்கும் சட்டங்கள் இன்றும் ஒரு அறிக்கையாகவே உள்ளன” என்று அவர் கூறினார்.சமூக ஊடகங்கள் வழியாக செய்திகள் பரவியதால், லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து எதிர்பாராத வரவேற்பு கிடைத்ததாகவும் குமார் பகிர்ந்து கொண்டார். “உதாரணமாக, ஒப்பிட்டு அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஒரு கனடிய பேராசிரியர் மற்றும் நிறைய இந்திய மாணவர்கள் எங்களைப் பார்க்க வந்தனர்” என்று அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன