Connect with us

டி.வி

அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறும் முத்து, மீனா.. இது தான் அடுத்த கதைக்களமா?

Published

on

Loading

அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறும் முத்து, மீனா.. இது தான் அடுத்த கதைக்களமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதும் இதற்கு  ரசிகர்கள் அமோக ஆதரவை கொடுத்து வருகின்றனர்.  தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்க ஆசை சீரியல்  முதல் ஐந்து இடத்திற்கும் முன்னேறி இருந்தது.  சிறகடிக்க ஆசை சீரியலில்  மனோஜ் உட்பட மொத்த குடும்பத்தையும்  ஏமாற்றி வருகிறார் ரோகிணி.  ஆனாலும் இவரை கோடீஸ்வரி என நம்பிய விஜயா,  திடீரென இவர்  சொன்னது அத்தனையும் பொய் என்று தெரிந்து  தற்போது அவரை  தாழ்வாக நடத்தி வருகின்றார். மேலும்  மீனா  குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாக இருந்தாலும் சுயமாக  தொழில் செய்து முன்னேறி  வந்தாலும், அதனை விஜயா கண்டு கொள்வதில்லை. அதே நேரத்தில் ஸ்ருதி பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தும்  அவர்  தனக்கு மரியாதை தரவில்லை, தனது பேச்சைக் கேட்கவில்லை என்று அவருடனும் முரண்பட்டுக் கொண்டுள்ளார். தற்போது இந்த சீரியலில் க்ரிஷின்  கேரக்டர்  முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. அதிலும் இதுவரை ரோகிணி சொன்ன பேச்சைக் கேட்டு நடந்த க்ரிஷ், தற்போது  ரோகிணியை மிரட்டும் விதமாக செயற்படுகின்றார்.   இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் குடிசை வீட்டுக்கு முன்னால் நின்று மீனா எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.எனவே இந்த சீரியலின் அடுத்த கட்டம்  க்ரிஷின் வாழ்க்கையை முன்னிட்டு முத்துவும் மீனாவும் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.ஆகவே, முத்துவும்  மீனாவும் வீட்டை விட்டு வெளியேறுவார்களா?  க்ரிஷ் விஷயத்தில்  ரோகிணி சிக்குவாரா? என்பதை இனிவரும் எபிசோடுகளில்  பார்ப்போம். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன