Connect with us

சினிமா

திருமணத்திற்கு பின்னரும் சோபிதா துலிபாலா படங்களில் நடிப்பாரா? நாகசைதன்யா அளித்த பதில்…

Published

on

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா

Loading

திருமணத்திற்கு பின்னரும் சோபிதா துலிபாலா படங்களில் நடிப்பாரா? நாகசைதன்யா அளித்த பதில்…

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா

Advertisement

திருமணத்திற்கு பின்னரும் நடிகை சோபிதா துலிபாலா படங்களில் நடிப்பாரா என்பது குறித்து அவரது வருங்கால கணவர் நாக சைதன்யாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே நாளை திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் முடித்து பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில் தனது திருமணம் குறித்து நாக சைதன்யா நேர்காணல் அளித்துள்ளார். அப்போது திருமணத்திற்கு பின்னரும் சோபிதா துலிபாலா படங்களில் நடிப்பாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு நாக சைதன்யா கூறியதாவது, “நிச்சயமாக திருமணத்திற்கு பின்னரும் சோபிதா தொடர்ந்து படங்களில் நடிப்பார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நிச்சயம் அவர் படங்களில் தொடர்வார்.

அவரது குடும்பம் தெலுங்கு பாரம்பரிய கலாச்சாரத்தை மிகவும் பின்பற்றுகிறது. என்னை அவர்களது மகனைப் போல் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் குடும்பத்துடன் நான் மிகுந்த சவுகரியமாக உணர்கிறேன்.

Advertisement

சோபிதா குடும்பப் பாங்கான பெண். நாங்கள் இருவரும் இணைந்து பல பண்டிகைகளை கொண்டாடியுள்ளோம். திருமணத்திற்கு பின்னரும் இந்த பந்தம் இன்னும் பலமாகும்” என்று தெரிவித்தார். நாக சைதன்யா தற்போது “தண்டல்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன