Connect with us

பொழுதுபோக்கு

அமரன் சென்சார் சான்றிதழை ரத்து செய்யுங்க: கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு!

Published

on

Amaran Pallavi Siva

Loading

அமரன் சென்சார் சான்றிதழை ரத்து செய்யுங்க: கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் எண் பயன்படுத்தியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி, ரூ1.1 கோடி நஷ்டஈடு கேட்டு மாணவர் ஒருவர் அமரன் படக்குழுவுக்கு எதிராக வழங்கு தொடர்ந்துள்ளார்.தமிழ்நாட்டை நேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் கேரக்டரில் நடித்திருந்தார். சாய் பல்லவி அவரது மனைவி இந்து கேரக்டரில் நடித்திருந்தார். கமல்ஹாசன் தயாரித்த இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ந் தேதி வெளியான அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவர் வி.வி.வாகீசன்,  இந்த திரைப்படத்தில் தனது தொலைபேசி எண்ணைக் காட்டியதால் சாய் பல்லவியின் ரசிகர்கள் தன்னை இடைவிடாமல் தொலைபேசியில் அழைத்து வருவதாக கூறி, அமரன் தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.மேலும் தனது மொபைல் எண் காட்டப்பட்டதால், தனக்கு ஏற்பட்ட மனை உளைச்சலுக்காக ரூ1.1 கோடி நஷ்டஈடு வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். அமரன் படத்தில் ஒரு காட்சியில், சாய் பல்லவி தனது மொபைல் எண் எழுதப்பட்ட ஒரு காகிதத்தை ஹீரோ சிவகார்த்திகேயன் மீது வீசுவார். உண்மையில், அந்த எண் மாணவர் வாகீசனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. படம் வெளியான நாளில் இருந்து சாய் பல்லவியிடம் பேச வேண்டும் என்று அந்த நம்பருக்கு போன் செய்ய தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.முதலில் காரணம் தெரியாமல் தவித்த அந்த மாணவர், தனக்கு வரும் கால்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு தனது மொபைல் எண் படத்தில் காட்டப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளார். தனது ஆதார் எண்ணை வைத்து வாங்கிய இந்த நம்பரை தனது வங்கி கணக்கு முதல் பல்வேறு பயன்பாட்டுக்கான பதிவு செய்து வைத்துள்ளதால், இந்த நம்பரை மாற்றுவது கடினமான செயலாக உள்ளது. இதனால் அவர் தனது கஷ்டங்களுக்கும் மன வேதனைக்கும் ரூ1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் படத்திலிருந்து தனது எண்ணை உடனடியாக நீக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த மாணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன