வணிகம்
ஐ.டி.ஆர்-1: இந்த வருமானங்களை மறந்தும்கூட காட்டாதீங்க… இ- ஃபைலிங் செய்ய முழு வழிகாட்டி!
ஐ.டி.ஆர்-1: இந்த வருமானங்களை மறந்தும்கூட காட்டாதீங்க… இ- ஃபைலிங் செய்ய முழு வழிகாட்டி!
வரும் செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைகிறது. கோடிக்கணக்கான வரி செலுத்துவோர் இந்த கடைசி நேரத்தில் தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர். கடந்த கால புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், பெரும்பாலானோர் ITR 1 படிவத்தையே பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு எத்தனை பேர் ITR 1 படிவத்தைப் பயன்படுத்தினர்?கடந்த 2024-25 நிதியாண்டில், ஜூலை 31 வரை தாக்கல் செய்யப்பட்ட 7.28 கோடி ITR கணக்குகளில், 45.77% அதாவது 3.34 கோடி பேர் ITR-1 படிவத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, அந்த நிதியாண்டில் 9 கோடிக்கும் அதிகமானோர் ITR தாக்கல் செய்திருந்தனர்.பிற படிவங்களைப் பொறுத்தவரை,ITR-2 படிவத்தை 1.09 கோடி (14.93%)ITR-3 படிவத்தை 91.1 லட்சம் (12.50%)ITR-4 படிவத்தை 1.88 கோடி (25.77%)ITR-5 படிவத்தை 7.48 லட்சம் (1.03%)ITR-7 படிவத்தை 7.48 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.யார் ITR 1 (சஹஜ்) படிவத்தை பயன்படுத்தலாம்?ITR-1 (சஹஜ்) படிவம் என்பது தனிநபர் வரி செலுத்துவோருக்கு மிகவும் எளிதானது. இதன் மூலம் வருமானம், சம்பளம், ஓய்வூதியம், அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து கிடைக்கும் வட்டி போன்ற எளிய வழிகளில் வருமானம் பெறுபவர்கள் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால், குறிப்பிட்ட சில வருமானங்களை இதில் சேர்க்க முடியாது என்பதை பலரும் அறிவதில்லை.ITR 1 படிவத்தைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள்:மொத்த வருமானம் ரூ.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.வருமானம் சம்பளம், ஓய்வூதியம், ஒரு வீட்டிலிருந்து வரும் சொத்து வருமானம் அல்லது வட்டி போன்ற பிற வருமான மூலங்களிலிருந்து மட்டும் வர வேண்டும்.மேலே குறிப்பிட்ட வருமான வரம்பை மீறும் பட்சத்திலோ அல்லது சிக்கலான வருமானங்கள் இருக்கும்பட்சத்திலோ, நீங்கள் ITR-2, ITR-3 அல்லது ITR-4 போன்ற பிற படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.ITR 1-ல் சேர்க்க முடியாத வருமானங்கள் யாவை?வணிகம் அல்லது தொழில் வருமானம்: இந்த வருமானங்கள் ITR-3 அல்லது ITR-4 படிவத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.மூலதன ஆதாயங்கள்: பங்கு விற்பனை, பரஸ்பர நிதி, அல்லது அசையா சொத்துக்களிலிருந்து வரும் மூலதன ஆதாயங்களை ITR-1-ல் சேர்க்க முடியாது. இதற்கு ITR-2 அல்லது ITR-3 படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுச் சொத்து வருமானம்: ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வருமானம் வந்தால், ITR-1 படிவம் செல்லாது. ITR-2 அல்லது ITR-3 படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.லாட்டரி, குதிரை பந்தயம் வருமானம்: இவ்வகையான வருமானங்களுக்கு ITR-2 படிவம் தேவைப்படும்.வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்கள்: வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்கள் இருந்தால் ITR-1 படிவம் செல்லாது.ரூ.5,000-க்கு மேல் விவசாய வருமானம்: விவசாய வருமானம் ரூ.5,000-க்கு மேல் இருந்தால் ITR-1 பயன்படுத்த முடியாது.மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மேல்: வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மேல் இருந்தால், ITR-2 போன்ற பிற படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.சரியான படிவத்தைத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?தவறான ITR படிவத்தைத் தேர்வு செய்தால், உங்கள் கணக்கு செல்லாததாக (defective return) அறிவிக்கப்படலாம். இதனால் கணக்குகள் சரிபார்க்கப்படுவது தாமதமாகும், மேலும் வரித் தொகையை திரும்பப் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, உங்கள் வருமானத்தின் தன்மைக்கு ஏற்ப சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.ITR-1 என்பது சாதரண வரி செலுத்துவோருக்கு மிகவும் எளிதான படிவம். ஆனால், மூலதன ஆதாயம், வணிக வருமானம், அதிக விவசாய வருமானம் அல்லது வெளிநாட்டு சொத்துக்கள் போன்ற சிக்கலான வருமானங்கள் இருந்தால், மற்ற படிவங்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. கடைசி நேரத்தில் அவசரப்படாமல், சரியான படிவத்தைப் பயன்படுத்தி, உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யுங்கள்!இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
